சுடச்சுட

  

  புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

  பழைமை வாய்ந்த இக்கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இந்திர விமானம், சூரிய பிரபை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 22-ஆம் தேதி கருட சேவை உத்ஸவம் நடந்தது.

  பின்னர் அனுமன், யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். அதன் தொடர்ச்சியாக சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் நடந்தது. சனிக்கிழமை காலை திருவெண்ணெய்த்தாழி, மாலை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேரில் சுவாமி, தாயார் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் தீர்த்தவாரி, சாற்றுமறை, ஊஞ்சல் உத்ஸவத்துடன் பிரம்மோத்ஸவம் நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai