சுடச்சுட

  

  அரசு தொழில்நுட்பத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

  By புதுச்சேரி  |   Published on : 29th April 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசுத் தொழில்நுட்பத் தேர்வுக்கு வரும் மே 3ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர்

  ஆர்.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை நேரடியாக அணுகி, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

  விண்ணப்பங்களை வரும் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  நடனத்துக்கு கீழ்நிலை பிரிவுக்கு ரூ.57, மேல்நிலைப் பிரிவுக்கு ரூ.62, இந்திய இசை கூடுதல் செயல்முறைக்கு கீழ்நிலை பிரிவுக்கு ரூ.27, மேல்நிலைப் பிரிவுக்கு ரூ.37, ஏனைய பாடங்களுக்கு கீழ்நிலைப் பிரிவுக்கு ரூ.37, மேல்நிலைப் பிரிவுக்கு ரூ.47 என தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  மேற்கண்ட தேர்வுக் கட்டணத்தையும், அதனுடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50ஐ விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கும் போது பணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

  ஏற்கெனவே தபால் மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன

  என்றார் கலைச்செல்வன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai