சுடச்சுட

  

  கடலில் குளித்து குதூகலிக்கும் பள்ளி மாணவர்கள்!

  By காரைக்கால்,  |   Published on : 29th April 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் கோடை விடுமுறையை மாணவர்கள் கடலில் குளித்து உல்லாசமாக கழித்து வருகின்றனர்.

  காரைக்காலில் 100 டிகிரியை தாண்டி வெயில் அதிகரித்துள்ளது. கடலோர மாவட்டமாக காரைக்கால் இருந்தும்கூட, வெப்பக் காற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பெரும்பாலானோர் இளநீர், தர்ப்பூசணி, பனை நுங்கு, குளிர்பானக் கடைகளை தேடி செல்கின்றனர்.

  குளங்கள் யாவும் வற்றிப்போனதால், நகரப் பகுதியினரும், கடலோர கிராம மாணவர்களும் உடல் சூட்டைத் தணிக்க பல மணி நேரம் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.

  தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. காரைக்கால் பகுதியில் குழந்தைகள், மாணவர்கள் விளையாட்டுடன் பொழுது போக்கும் வகையில் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்டவை இல்லாததால், இப்பகுதி மாணவர்கள் கடலில் குளித்து பொழுதை கழித்து வருகின்றனர்.

  பயன்பாடு இல்லாத கட்டுமரங்களை கடலில் கொண்டு சென்றும், காற்று நிரப்பப்பட்ட டியூப்களை கொண்டு சென்றும், கடல் அலைகளுக்கு மத்தியில் டைவ் அடித்து மகிழ்கின்றனர். சிலர், பல மணி நேரம் கடற்கரையில் படுத்துக்கொள்கின்றனர். அலை வந்து தொட்டு செல்வதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். கடலில் விளையாடுவதன் மூலம் கட்டணமில்லா குதூகலத்தை பெறமுடிவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

  தினமும் மாலை நேரம் வந்துவிட்டால், காரைக்கால் கடற்கரைப் பகுதி மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

  இரவு கடலோரக் காவல்நிலைய போலீஸார் கடற்கரையை விட்டு செல்லுமாறு கூறும் நேரம் வரை மக்கள் பொழுதை கழிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai