சுடச்சுட

  

  காரைக்காலில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்

  By காரைக்கால்  |   Published on : 29th April 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் இரவுநேர உணவக கடையை சேதப்படுத்தி, உரிமையாளரை தாக்கிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது:

  காரைக்கால் பாரதியார் சாலை பேருந்து நிலையம் அருகே இரவு நேர உணவகம் நடத்தி வருபவர் முத்துக்குமரசாமி. ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரத்தின்போது,

  காரைக்கால் சின்னக்கோயில்பத்தை சேர்ந்த சக்கரபாணி என்பவர் வந்தாராம். சாப்பாடு வாங்கிக்கொண்டு உரிமையாளரை கேட்காமல் சாம்பார் பேக் செய்துள்ளார். அவரை முத்துக்குமரசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது.

  இதனால், ஆத்திரமடைந்த சக்கரபாணி கடை உரிமையாளர் முத்துக்குமரசாமியை தாக்கியுள்ளார்.

  மேலும், கடையின் பொருள்களை தூக்கியெறிந்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்

  டார்.

  புகாரின் பேரில், காரைக்கால் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சக்கரபாணியை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai