சுடச்சுட

  

  : காரைக்காலில் நாட்டியாலயா அகாதெமி சார்பில், நாட்டியாஞ்சலி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  காரைக்கால் நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி சார்பில் சித்ராகோபிநாத் மாணவிகள் 60 பேர் பங்கேற்ற 11-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா காரைக்கால் கலையரங்கில் நடைபெற்றது.

  கணபதி துதியில் தொடங்கி, நந்தி கவுத்துவம், நடன சபாபதி கவுத்துவம், கீர்த்தனைகள், காளி, நாரத லீலா நாட்டிய நாடகங்கள், கும்மி, கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்களுடன் தில்லானா நிகழ்ச்சியோடு முடிக்கப்பட்டது.

  ஓஎன்ஜிசி மேலாளர் ரவி, சிபிசிஎல் துணைப் பொது மேலாளர் பன்னீர்செல்வம், சிபிசிஎல் தொழில் சங்க துணைச் செயலர் கார்த்திகேசன், பகவான் பக்தஜனசபா தலைவர் அமுதா ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.

  மத்திய, மாநில அளவிலான பல்வேறு நாட்டியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்ற நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமியின் 13 மாணவிகளுக்கு சிறப்புப் பரிசும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு, சான்றிதழ் தரப்பட்டது. நிறைவில் கோபிநாத் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai