சுடச்சுட

  

  புதுச்சேரி ஜவஹர் சிறுவர் இல்லத்தில் கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

  கோடைகாலத்தையொட்டி, பள்ளிக் கல்வி இயக்கம், ஜவஹர் சிறுவர் இல்லம் (பாலபவன்) சார்பில் குழந்தைகளுக்கு நடனம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், ஓவியம், கைவினைக்கலை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், கேரம், செஸ், சிறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ போன்றவை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை ஜவஹர் சிறுவர் இல்லத்தில் தொடங்கியது.

  6 வயது முதல் 16 வயதுடைய புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

  இதே போல லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி, அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் இப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. வரும் மே 31ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்

  டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai