சுடச்சுட

  

  தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவம் தொடக்கம்

  By காரைக்கால்  |   Published on : 29th April 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் தலத்தெரு ஸ்ரீ தங்கமாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவம் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

  நிகழ்ச்சியின் 2-ம் நாளான திங்கள்கிழமை அம்பாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 3- நாள் சிம்ம வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளை சாற்று அலங்காரத்திலும், 5-ம் நாளில் ரிஷப வாகனத்திலும், 6-ம் நாளில் சந்தனக் காப்பு அலங்காரம், 7-ம் நாள் கிருஷ்ணன் வேடத்தில் வெண்ணெய்த்தாழியில் புறப்பாடும், 8-ம் நாள் நவசக்தி அர்ச்சனை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக மே 5-ம் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது. 6-ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நடத்தப்பட்டு 7-ம் தேதி விடையாற்றியில் அம்மன் பொன்னூஞ்சல் ஆடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

  விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai