சுடச்சுட

    

    தனியார் நிறுவனத்தில் திருட்டு:3 பெண்கள் கைது

    By புதுச்சேரி  |   Published on : 29th April 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வில்லியனூர் அருகே தனியார் நிறுவனத்தில் மின் மோட்டார் உள்ளிட்டப் பொருள்களைத் திருடியதாக 3 பெண்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    புதுவை கரிக்கலாம்பாக்கம் பகுதியில் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் தொடர் திருட்டு நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு அப்பகுதி கொசுவர்த்தி சுருள் தயாரிக்கும் நிறுவனம் அருகே திரிந்த பெண்களை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

    அப்போது மூன்று பெண்கள் பிடிபட்டனர், இரண்டு பேர் ஆட்டோவில் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட பெண்களிடம் கரிக்கலாம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். இதில் அவர்கள் புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி நாகராணி (32), அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி லட்சுமி (33), சாரம் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி அனிதா (34) என்பதும் தெரிந்தது.

    மேலும், இவர்களிடம் விசாரித்தபோது, தனிக்குப்பம் மடுகரை சாலையில் உள்ள தனியார் இரும்பு பொருள் உற்பத்தி நிறுவனத்தில் மின் மோட்டார் மற்றும் உதிரி பாகங்களைத் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன் போலீஸில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில், நாகராணி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த கரிக்கலாம்பாக்கம் போலீஸார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோட்டார் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து, தலைமறைவான இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai