சுடச்சுட

    

    புதுவை அருகே தூங்கிய பெண்ணிடம் மர்ம நபர்கள் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

    புதுவை அருகே உள்ள திருபுவனை சிலுக்காரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வி (28). கடலூர் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர், இவரது தங்கை புவனேஸ்வரி (23). இவர், செல்வி வீட்டில் தங்கியிருந்தார். இவர்கள் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கினர்.

    திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து உள்ள வந்த மர்ம நபர்கள் சிலர், புவனேஸ்வரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிச் செயின், மற்றொரு செயின், அருகே படுத்திருந்த அவரது மகள் அருணாவின் கழுத்திலிருந்த 1 பவுன் செயின் ஆகியவற்றைப் பறித்துள்ளனர். அவர்கள் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றதும், தடியால் தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனராம்.

    இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai