சுடச்சுட

  

  காரைக்காலில் மக்களவைத் தேர்தலுக்கு முதல் நாளில் மட்டும் ரூ. 36 கோடி வங்கி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது குறித்து தேர்தல் துறை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? என்று புதுவை தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஏ.எம்.எச். நாஜிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியது:

  மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தொழில் ரீதியாக கொண்டு சென்ற ஓரிரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை என்ற பெயரில் தேர்தல் துறை கண்மூடித்தனமாக நடந்து கொண்டது.

  ஆனால், இதே தேர்தல் துறை மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முந்தைய 3 நாள்களில் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டது.

  தேர்தலுக்கு முதல் நாள் மட்டும் காரைக்கால் வங்கிகளில் இருந்து ரூ.36 கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

  ரூ. 50 ஆயிரத்திற்குள் வங்கியில் செலுத்தினாலோ, எடுத்தாலோ, வாகனத்தில் எடுத்துச் சென்றாலோ கணக்கு கேட்டு பறிமுதல் செய்த தேர்தல் துறை, இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றத்தை கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன்? என்று நாஜிம் கேள்வியெழுப்பினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai