சுடச்சுட

  

  புதுச்சேரியில் தேர்தல் விதிகளை சற்றுத் தளர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் வெளியிட்ட அறிக்கை:

  புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றுள்ளது. இதையடுத்து அன்றாட நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக தடையை சிறிது தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  அதே நேரத்தில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்களை இடமாற்றம் செய்யவும், அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள், இதர அரசியல் நிகழ்வுகளில் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்பதற்கும் இத்தளர்வு பொருந்தாது என்றார் ஸ்ரீகாந்த்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai