சுடச்சுட

  

  பாரம்பரிய உணவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

  By புதுச்சேரி  |   Published on : 29th April 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை பெஸ்ட் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

  புதுவை உழவர்கரை ஸ்ரீநிவாசா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புதுவை மாநில முன்னாள் அரசு செயலர் ஹேமச்சந்திரன் பங்கேற்று, ரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வரும் உணவுப் பொருள்களை உண்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்து அதனை அழிப்பது குறித்தும் விளக்கிப் பேசினார்.

  சீர்காழி இயற்கை விவசாய சங்கத்தினர் சார்பில், ரசாயன உரங்களால் பழங்களில் ஏற்படும் கெடுதல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து, உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும், மருத்துவ குணம் நிறைந்த, தினை, வரகு, சாமை உள்ளிட்ட நாம் மறந்துபோன பாரம்பரிய தானியங்களை அறிமுகப்படுத்தி அதன் நன்மைகளை கூறினர்.

  ரசாயன உரமில்லாத, இயற்கை உரத்தால் விளைந்த உணவுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

  விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெஸ்ட் பவுண்டேஷன் நிறுவன தலைவர் தாமோதரன் மற்றும் ஸ்ரீநிவாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைப்பினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai