சுடச்சுட

  

  புதுச்சேரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

  புதுவையில் முதன் முதலாக அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையம் நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் புதுவையிலேயே இப்பணியை ஆசிரியர்கள் செய்கின்றனர். பாடத்துக்கு 200 ஆசிரியர்கள் வீதம் ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டனர். இதற்காக 20 அறைகள் ஒதுக்கப்பட்டன. இப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

  இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: புதுச்சேரியில் நடப்பாண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துள்ளது.

  பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இடையே தேர்தல் பணிகள் இருந்தன. திங்கள்கிழமை முதல் திருத்திய விடைத்தாள் விவரங்கள் சிடியில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் சிடி மற்றும் விடைத்தாள்களை தமிழக அரசு தேர்வுத் துறை இயக்குநரகத்தில் ஒப்படைப்போம் எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai