சுடச்சுட

  

  வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்!

  By புதுச்சேரி  |   Published on : 29th April 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

  புதுச்சேரி நகரின் மையமாக விளங்கும் மறைமலைஅடிகள் சாலையில் மத்திய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

  அதே போல புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்துகள் என ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதுவை பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 30 பஸ்களுக்கு மேல் நிறுத்தும் வசதி உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புதுவை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை புதுவை நகராட்சி நடத்தும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஆனால் அங்கு மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்படுகின்றன. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

  ரெளடிகள் மூலம் மிரட்டல்: இருசக்கர வாகனம் நடத்துவோர் தரும் ரசீதில் கட்டணம் ரூ.2 என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வசூலிப்பதோ ரூ.10. இவ்வாறு கூடுதல்

  கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுமக்கள் கேட்டால் சமூக விரோதிகளை வைத்து மிரட்டுகின்றனராம். இதனால் பெரும்பாலான பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர்.

  இதுகுறித்து உருளையன்பேட்டையைச் சேர்ந்த ரவி கூறியது: இங்கு வெயிலிலும், மழையிலும்தான் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறகு.

  இது அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள் அடிக்கடி சோதனை நடத்தினால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai