சுடச்சுட

    

    புதுவை அருகே காட்டேரிக்குப்பத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

    புதுவை அருகே உள்ள காட்டேரிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். பின் பக்கக் கதவு திறந்திருந்ததால், அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர், பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai