சுடச்சுட

    

    வீராம்பட்டினத்தில் மறு தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்

    By புதுச்சேரி,  |   Published on : 29th April 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு நடந்த புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மறு தேர்தல் நடத்தக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், மாநிலச் செயலரும் எம்எல்ஏவுமான அன்பழகன், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு காங்கிரஸ் அரசும், என்.ஆர்.காங்கிரஸ் அரசும் வீடு கட்ட மானியம் வழங்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர். வீராம்பட்டினத்தில் சுதந்திரமான முறையில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. வாக்களித்தோர் மீதும், வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்தோர் மீதும் பல வழக்குகள் தற்போது போடப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வீராம்பட்டினத்தில் உள்ள 5 வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மனு அனுப்பியுள்ளோம் என்றார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai