சுடச்சுட

  

  புதுச்சேரி ஆச்சார்யா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 209 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். டெக் மகிந்திரா, ரிலையன்ஸ், பிலிப்ஸ், கோச்சார், ஒஎன்ஜிசி, மலபார் கோல்டு உள்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய 209 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்விக்குழும மேலாண் இயக்குநர் அரவிந்தன் வழங்கினார். முதல்வர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai