சுடச்சுட

    

    ஆட்சியில் உள்ளோருக்கு  தேர்தல் துறை சாதகம்: பாமக புகார்

    By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்சி அதிகாரத்தில் உள்ளோருக்கு தேர்தல் துறை சாதகமாக செயல்பட்டது என புதுவை மாநில பாமக புகார் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து அதன் மாநிலச் செயலாளர் இரா.அனந்தராமன் வெளியிட்ட அறிக்கை:
     நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியது. "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற விளம்பர பதாகையை நகரம் முழுவதும் வைத்திருந்தது. பணம் தருவோர், பெறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டது.
     ஆனால் கடைசி 2 நாள்களில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். சாலையில் சென்ற அப்பாவி மக்களை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.
     ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியினர் இச்சோதனையில் சிக்கவில்லை. ஒருவரைக் கூட அடையாளம் காணவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai