சுடச்சுட

    

    புதுவை அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     புதுவை அருகே உள்ள அரியாங்குப்பம் துரௌபதியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த முருகன் மகள் இந்திரா (19). இவரது தந்தை இறந்த நிலையில், அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
     கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
     நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் சுந்தரி, திங்கள்கிழமை போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில், அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai