சுடச்சுட

  

  காரைக்காலில்  பெண் பலாத்காரம்: இருவர் கைது

  By  காரைக்கால்,  |   Published on : 30th April 2014 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் கடற்கரையில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   காரைக்கால் கடற்கரை நடைமேடை அருகே காதலர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை காலை அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த மூவர் தங்களை போலீஸார் எனக் கூறிக்கொண்டு கத்தியைக் காட்டி காதலனை விரட்டினராம். பிறகு அந்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
   ரோந்து பணியில் இருந்த கடலோரக் காவல் நிலைய போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பியோடிவிட்டாராம்.
   மற்ற இருவரையும் பிடித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ரோந்து போலீஸார் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், பிடிபட்டவர்கள் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயபால், பிரசாந்த் என்பதும், தப்பியவர் திருப்பட்டினத்தைச் சேர்ந்த சீனு என்பதும் தெரியவந்தது.
   மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகாபரத்வாஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) மாரிமுத்து ஆகியோர் காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், பிடிபட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
   தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று காவல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஜெயபால், பிரசாந்த் ஆகியோரை கைதுசெய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai