சுடச்சுட

  

  தங்கையின் நிலத்தை விற்று மோசடி:  அண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் தங்கையின் நிலத்தை வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்ததாக அண்ணன் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
   இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி சொர்ணத்துக்கு சொந்தமான மனைகள் உழவர்கரைப் பகுதியில் இருந்துள்ளது.
   அந்த நிலத்தை, சொர்ணத்தின் சகோதரரான, முத்துப்பிள்ளைப்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி, புதுவையைச் சேர்ந்த சாம் பவுல், ராமமூர்த்தி ஆகியோருக்கு முறைகேடாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
   இந்நிலையில், நிலத்துக்கான ஆவணங்களை காந்தி அண்மையில் சரிபார்த்துள்ளார். அப்போது சொர்ணத்தின் பெயரில் உள்ள மனைகள், வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
   இதுகுறித்து காந்தி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார், நாராயணசாமி, அவரது மனைவி தனலட்சுமி, சாம் பவுல், ராமமூர்த்தி ஆகியோர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai