சுடச்சுட

  

  புதுச்சேரி சிவசு அறக்கட்டளை, பெண்கள் செயல்பாட்டுக் குழு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு இலக்கண வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   புதுவை சகா ஓவியப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு அறக்கட்டளை நிறுவனர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். பேராசிரியர் ந.இளங்கோ மாணவ, மாணவிகளுக்கு இலக்கண வகுப்பை நடத்தினார். பெண்கள் செயல்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் மானி, எழுத்தாளர்கள் புதுவை பார்த்தசாரதி, அபிஷேகப்பாக்கம் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai