சுடச்சுட

    

    புதுவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.
     புதுவை அருகே உள்ள தவளக்குப்பத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், திங்கள்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்றார். புதுவை-கடலூர் சாலையில், தனியார் மோட்டார் பைக் நிறுவனம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.
     இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை புறநகர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீஸார், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai