சுடச்சுட

  

  வீராம்பட்டினத்தில்  என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்:  மீனவ பஞ்சாயத்து தலைவர் மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வீராம்பட்டினத்தில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   புதுவை வீராம்பட்டினம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (50). என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர், திங்கள்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் முத்துவுடன் பைக்கில் அரியாங்குப்பம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
   இதன் பின்னர் இரவு இருவரும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். வீராம்பட்டினம் நுழைவு வாயில் பகுதிக்குள் சென்றபோது, வழிமறித்த சிலர், மகாலிங்கத்தை பிடித்து கடுமையாகத் தாக்கினராம்.
   பஞ்சாயத்தார் உத்தரவை மீறி ஏன் வாக்களித்தாய் எனக் கேட்டு மகாலிங்கத்தின் கைகளில் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முகத்தை மூடியிருந்த அவர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டனராம்.
   இதில் காயமடைந்த மகாலிங்கம், புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த அரியாங்குப்பம் எம்எல்ஏவும், சட்டப் பேரவை சபாநாயகருமான சபாபதி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
   காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி மற்றும் அரியாங்குப்பம் போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
   இதுகுறித்த புகாரின் பேரில், வீராம்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் விஸ்வநாதன், பத்மநாபன், சந்திரன், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது அரியாங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இதனால் வீராம்பட்டினத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai