சுடச்சுட

  

  வீராம்பட்டினம் பஞ்சாயத்தை கலைக்க திமுக வலியுறுத்தல்

  By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தைக் கலைத்து விட்டு அங்கு அமைதிக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
   இதுதொடர்பாக மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
   வீராம்பட்டினம் கிராமத்தில் 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அப்பகுதி மக்கள் அறிவித்தனர். இதனால் மக்களவைத் தேர்தலில் அங்கு 32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. தற்போது வாக்குகளை பதிவு செய்தவர்களுக்கும், புறக்கணித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
   எனவே, அப்பகுதியில் கிராம பஞ்சாயத்தை உடனே கலைத்து விட்டு அமைதிக் குழுவை ஏற்படுத்த வேண்டும்.
   புதுவையில் திமுக தவிர அனைத்துக் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தன. ஆனால் தேர்தல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
   புதுவையில் பண நடமாட்டத்தை தடுக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறச் செய்யவும் தேர்தல் துறை தவறி விட்டது.
   ஆளும் என்.ஆர். காங்கிரஸ், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுகளின் தவறுகளை புதுவை வாக்காளர்களிடம் திமுக கொண்டு சென்றது. அதனால் எப்போதும் இல்லாத வகையில் 82.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
   இதனால் திமுக தவிர மற்ற கட்சிகள் மிரண்டு போய் உள்ளன என்றார் சுப்பிரமணியம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai