Enable Javscript for better performance
அதிமுக தேர்தல் கூட்டத்தில்  குடிநீர் பாட்டில் வழங்கியதாக வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக தேர்தல் கூட்டத்தில்  குடிநீர் பாட்டில் வழங்கியதாக வழக்கு

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நடந்த அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் நன்னடத்தை விதிகளை மீறி குடிநீர் பாட்டில்கள் வழங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     புதுவை முதலியார்பேட்டை 100அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை மக்களவைத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழக அமைச்சர்கள் சம்பத், காமராஜ், செம்மலை எம்பி உள்ளிட்டோர் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்தும், தேர்தல் பணியாற்றுவது தொடர்பாகவும் பேசினர். அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், வேட்பாளர் ஓமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
     இக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி, குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்ததாக, புதுவைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளி புகார் கொடுத்தார். அதன் பேரில், முதலியார்பேட்டை போலீஸார் அதிமுகவினர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai