Enable Javscript for better performance
இலக்கண இலக்கிய பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி சிவசு அறக்கட்டளை, பெண்கள் செயல்பாட்டுக்குழு சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியருக்கான தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புகள் சகா ஓவியப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
     பேராசிரியர் செல்வம், மாணவ, மாணவியருக்கு இலக்கண வகுப்புகளை நடத்தினார். சீனு.வேணுகோபால் பேச்சுக் கலை குறித்து பயிற்சி அளித்தார். சிவசு அறக்கட்டளை நிறுவனர் பாவலர் சண்முகசுந்தரம், பெண்கள் செயல்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் மரபுமாமணி.மாநி, எழுத்தாளர்கள் புதுவை பார்த்தசாரதி, அபிஷேகப்பாக்கம் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai