Enable Javscript for better performance
எஸ்எஸ்எல்சி தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்எல்சி தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

    By  காரைக்கால்,  |   Published on : 27th March 2014 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
     காரைக்கால் மாவட்டத்தில் 27 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 21 சுயநிதி தனியார் பள்ளிகள் என 54 பள்ளிகளில் இருந்து 2973 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
     காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா ஆய்வு நடத்தினார்.
     முதன்மைக் கல்வி அலுவலர் வி. மாரிமுத்து, கல்வித் துறை சார்பில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து ஆட்சியருக்கு விளக்கம் அளித்தார்.
     இதுதவிர, மாவட்டத்தில் 386 பேர் தனித் தேர்வர்கள் எழுதுகிறார்கள். இவர்கள் காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் எழுதுகிறார்கள்.
     காரைக்கால் கோவில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.மணிகண்டன், காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் எம்.முகமது சபூரொலி ஆகிய இரு மனநலம் குன்றிய மாணவர்கள், அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏ.ரேகா என்கிற ஒரு மாற்றுத் திறனாளி மாணவி ஆகியோர் தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai