Enable Javscript for better performance
எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.
     புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். புதுவை மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் மொத்தம் 13 தேர்வு மையங்களிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் முதல் பாடத்துக்கானத் தேர்வை எழுதினர்.
     புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 17,256 மாணவர்களில் 169 பேர் தேர்வு எழுதவில்லை.
     தேர்வு மையங்களை கண்காணிக்க புதுவையில் 855 அறை கண்காணிப்பாளர்களும், காரைக்காலில் 182 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     முறைகேடுகளை தடுக்க அனைத்து மையங்களிலும் நிரந்தர பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
     தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித் துறை இயக்குநர் ஏ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai