Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட் கட்சியினர்  பிரசாரத்தால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    கம்யூனிஸ்ட் கட்சியினர்  பிரசாரத்தால் பரபரப்பு

    By  புதுச்சேரி  |   Published on : 27th March 2014 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா கூட்டத்துக்கு அருகிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
     உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடக்கும் இடத்தின் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விஸ்வநாதனின் பிரசார வாகனத்தை கொண்டுவந்து நிறுத்தி அவர்கள் ஓட்டு சேகரித்தனர். இதை ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் தடுத்து சிறிது தூரம் தள்ளிச்சென்று பிரசாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
     ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டம் நடந்த இடத்தின் எதிரில் நின்று பிரசாரம் செய்தனர். இதை காங்கிரஸார் கெரோ செய்தனர். இதனால் அங்கு இடதுசாரி நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை ஒரு நிமிடம் பேச அனுமதித்துவிட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai