Enable Javscript for better performance
சுகாதார இயக்க ஊழியர்கள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை பேரணி, முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
     புதுச்சேரி சுகாதார இயக்கத்தின் கீழ் 500-க்கு மேற்பட்டோர் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரிகின்றனர். சுகாதாரத் துறையில் உள்ள நிரந்தர ஊழியர்களுடன் தேசிய கிராமப்புற சுகாதார இயக்க ஊழியர்களும் சரிசமமாக பணியாற்றி வரும்போதும், அவர்களுக்கு இணையான ஊதிய விகிதங்களும், இதர உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படவில்லை. நிரந்தர ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதியே சுகாதார இயக்க ஊழியர்கள் தொகுப்பு ஊதியமாக பெறுகின்றனர்.
     இதுவரை வழங்கியதுபோல் ஊதிய உயர்வை அனைத்து சுகாதார இயக்க ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 20 சதவீதம் ஊதிய உயர்வு தர வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாகும், புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் சுகாதார இயக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
     கெüரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன் தலைமை வகித்தார். தலைவர் தெய்வானந்த சங்கரநாராயணன், செயலாளர் ஆர்.பிரகதீஸ்வரன், பொருளாளர் அர்மன்ட் சார்லஸ், நிர்வாகிகள் வினோத், பாரதி, மல்லிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     முன்னதாக கம்பன் கலையரங்கம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai