Enable Javscript for better performance
தலைமறைவாக இருந்த குண்டாஸ் ரௌடி கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுவை அருகே தலைமறைவாக இருந்த குண்டாஸ் ரௌடி கைது செய்யப்பட்டார்.
     வில்லியனூர் அருகே திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). ரௌடியான இவர் மீது, கொலை வழக்கு, அடிதடி, சாராய வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி, பெங்களூரு பகுதியில் குண்டு வெடிப்பு வழக்கு, ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர்.
     இவரது குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுவை ஆட்சியர் தீபக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
     இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை போலீஸார் தேடி வந்தனர்.
     இந்நிலையில், திருக்காஞ்சிப் பகுதியில் திரிந்த நித்தியானந்தத்தை, மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான போலீஸார் அண்மையில் கைது செய்து, புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai