Enable Javscript for better performance
தலைமைச் செயலருக்கு எதிரான பாசிக் ஊழியர்கள் வழக்கு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தலைமைச் செயலருக்கு எதிரான பாசிக் ஊழியர்கள் வழக்கு தள்ளுபடி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை தலைமைச் செயலருக்கு எதிராக, பாசிக் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
     இதுதொடர்பாக பாசிக் மேலாண் இயக்குநர் டாக்டர் அ.ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
     பாசிக்கில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆர்.அதிகமான், எஸ்.காந்தி, எம்.சந்திரன், ஏ.நாராயணமூர்த்தி, கே.குமாரவேல், எம்.ராமமூர்த்தி, கே.மோகனரங்கன், டி.முருகைய, ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை அதிகாரியின் அறிக்கை தரப்பட்டு விளக்கம் கோரப்பட்டது.
     இதற்கிடையே அந்த 8 ஊழியர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி மனு செய்தனர். இதையடுத்து கடந்த 20.1.2014-ல் வெளியிட்ட உத்தரவில் ஒரு வார காலத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையாணை காலவரம்பு கடந்த 27.1.14-ல் காலாவதியாகி விட்டது. இதையடுத்து அவர்களது விளக்கத்தை பரிசீலித்த பாசிக் மேலாண் இயக்குநர், 8 ஊழியர்களையும் கடந்த 11.2.14-ல் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
     இந்த உத்தரவை எதிர்த்து தடையிருந்ததாகக் கூறி அரசு தலைமைச் செயலாளர், அரசு தொழிலாளர் ஆணையர், வேளாண் துறை இயக்குநர் மீது 8 ஊழியர்களும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
     இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தடை ஆணை நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து அவர்களது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என தெரிவித்துள்ளார் ராமமூர்த்தி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai