Enable Javscript for better performance
தேசிய சுற்றுச்சூழல்  விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய சுற்றுச்சூழல்  விழிப்புணர்வு முகாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை முத்தியால்பேட்டை காமராஜர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
     மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, புதுவை சுற்றுச்சூழல் கல்வித் துறை, மாநில பயிற்சி மையம், சென்னை சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் மூன்று நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
     முகாமுக்கு தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சம்பத்சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
     சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமநாதன் முகாமைத் தொடங்கி வைத்தார். பல்லுயிர் பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் குறித்து ஓவியம், கட்டுரை, செயல்திட்டம், நினைவுத் திறன் போட்டிகள் நடைபெற்றன.
     இரண்டாம் நாள் பல்லுயிர் பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு மாணவர் பேரணியை பாக்கமுடையான்பட்டு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
     வில்லியனூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி பல்லுயிர் பெருக்கம் பற்றிய பொம்மலாட்டம் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
     மூன்றாம் நாள் அய்யங்குட்டிப்பாளையம் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
     நிறைவு விழாவில் முத்தியால்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai