Enable Javscript for better performance
பல்லுயிர் பெருக்க  பதிவேடு தயாரிப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லுயிர் பெருக்க  பதிவேடு தயாரிப்பு முகாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வி இயக்க மாநில பயிற்சி மையம், அறிவியல் தொழில்நுட்பத் துறை, வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி சார்பில் பல்லுயிர் பெருக்கப் பதிவேடு தயாரிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்ரது.
     தேசிய பசுமைப்படை ஆசிரியர் மோ.ஜனார்த்தனன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கு.சுரேஷ் தலைமை வகித்தார். மாநில பயிற்சி மைய சிறப்புப் பணி அலுவலர் முனைவர் வா.கிருஷ்ணன், பல்லுயிர் பெருக்கப் பதிவேடு தயாரிப்பு முறை, அதன் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
     விரிவுரையாளர் பெ.பூபதி வாழ்த்திப் பேசினார். ஆசிரியர்கள் ந.மோகன்ராஜ், சீ.ராமநாதன் கருத்தாளர்களாக செயல்பட்டு வீராம்பட்டினம் கடற்கரையில் காணப்படும் பல்லுயிர் பெருக்கத்தை பதிவு செய்ய மாணவிகளுக்கு பயிற்சி அளித்தநர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai