Enable Javscript for better performance
பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் ரங்கசாமி- Dinamani

சுடச்சுட

    

    பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் ரங்கசாமி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
     புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மதியம் திருச்செந்தூருக்கு காரில் கிளம்பிச் சென்றார். இரவு 9 மணிக்கு அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு இரவோடு இரவாக புதுச்சேரிக்குத் திரும்பினார்.
     புதன்கிழமை அதிகாலையில் அப்பாபைத்தியம் சுவாமிகள் கோவிலில் பூஜை செய்துவிட்டு மங்களம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
     இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் ஆனந்தபாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், வாரியத் தலைவர்கள் பாலன், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     அலுவலகத்தை திறந்து வைத்து தொகுதி நிர்வாகிகளிடையே முதல்வர் ரங்கசாமி வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேசியது:
     புதுச்சேரியின் எம்.பி.யாக நாராயணசாமி உள்ளார். நீண்டகாலமாக இருந்த அவர் புதுச்சேரிக்கு என்ன செய்துவிட்டார்? மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்த என்.ஆர்.காங்கிரஸýக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
     கட்சியின் வேட்பாளரான ராதாகிருஷ்ணன் அனுபவம் வாய்ந்தவர், சட்டப்பேரவைத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். எனவே அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
     நீங்கள் கொண்டுவந்த ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. தற்போது புதிய எம்.பி.யை தேர்வு செய்து அனுப்பினால் அவர் மத்திய அரசிடம் பல்வேறு நலத்திட்டங்களை கேட்டுப்பெறுவார். அதன்மூலம் எஞ்சிய 2 ஆண்டுகளில் அறிவித்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்றார் ரங்கசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai