Enable Javscript for better performance
புதுவையில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன:  ரங்கசாமி அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன:  ரங்கசாமி அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி நகரில் குப்பைகளை கூட வார முடியாத நிர்வாகம் செயல்படுகிறது என மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான வி.நாராயணசாமி கூறினார்.
     உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் நாராயணசாமி பேசியது: முதல்வராக வைத்திலிங்கம் இருந்தபோது கொண்டுவந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் அதன்பின் ஆட்சிக்கு வந்த ரங்கசாமி நிறுத்தினார்.
     கடந்த 2011-ல் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் 20 கிலோ வெள்ளை அரிசி வழங்கப்பட்டது. ரங்கசாமி 30 கிலோ அரிசி போடுவதாக கூறினார். ஆனால் அதைத் தரவில்லை. தற்போது வழங்கப்படும் அரிசியை சமைக்கக்கூட முடியவில்லை. கால்நடைகள் கூட சாப்பிட மறுக்கின்றன.
     காமராஜர் வீடு கட்டும் திட்டம், சென்டாக் உதவித்தொகை, ரொட்டி பால் திட்டம், மாலை சிற்றுண்டி திட்டம் என அனைத்தையும் நிறுத்தியவர் முதல்வர் ரங்கசாமி. அவரோ நாராயணசாமிதான் நிதியை தடுத்துவிட்டதாக கூறி வருகிறார்.
     புதுச்சேரியில் மேம்பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள் உள்பட ரூ.643 கோடி திட்டங்களை கூடுதலாக புதுச்சேரிக்கு பெற்றுத்தந்துள்ளேன். இதைப்பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல்வர் ரங்கசாமி தயாரா?
     மாநில அரசு அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்த அரசுக்கு மீண்டும் மக்கள் ஆதரவு அளித்து ஏற்கெனவே செய்த தவறை செய்துவிடக்கூடாது என்றார் நாராயணசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai