Enable Javscript for better performance
பேராயரிடம் ஆசி பெற்றார் ஆம் ஆத்மி வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    பேராயரிடம் ஆசி பெற்றார் ஆம் ஆத்மி வேட்பாளர்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வி.ரங்கராஜன் புதன்கிழமை புதுவை கிறிஸ்தவ மறை மாவட்ட பேராயர் அருட்தந்தை அந்தோனி ஆனந்தராயரை நேரில் சந்தித்து ஆசி பெற்று ஆதரவு கோரினார்.
     பேராயர் ஆனந்தராயர் அவருக்கு ஆசி வழங்கி ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் குறித்து கேட்டறிந்தார். இச்சந்திப்பின்போது பேராயரின் செயலர் சுவாமிநாதன் உடனிருந்தார்.
     இதனைத்தொடர்ந்து ரங்கராஜன், பேராயர் அலுவலக பொருளாளர் ஜோசப் அருமைசெல்வம், முதன்மை குரு அருளானந்தம், லூயிஸ் மற்றும் பிலோமின்தாஸ் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
     அதன் பின்னர் தூய இருதய மடத்தின் தலைவி பிரிட்டோ, மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி சபை, லூயிஸ் கொன்சாகா சபை, செயின்ட் ஜோசப் ஆப் குளூனி சபைக்கும் நேரில் சென்று அவைகளின் ஓருங்கிணைப்பாளர்களையும் சந்தித்து ஆதரவு கோரினார். மாநில செயலாளர் ரவிசீனுவாசன், செல்வின், பீட்டர், டெரன்ஸ், சேவியஅல்போன்ஸ் லிகோரிர் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai