Enable Javscript for better performance
பைக், பித்தளை அண்டா திருட்டு: சிறை சென்று வந்தவர் கைவரிசை- Dinamani

சுடச்சுட

    

    பைக், பித்தளை அண்டா திருட்டு: சிறை சென்று வந்தவர் கைவரிசை

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அருகே பைக் மற்றும் பித்தளை அண்டாவைத் திருடி வந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     புதுவை அருகே உள்ள நெட்டப்பாக்கம் போலீஸார், சப் இன்ஸ்பெக்டர் பேட்ரிக் தலைமையில் புதன்கிழமை அதிகாலை மடுகரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, கரியமாணிக்கம் அருகே பைக்கில் பித்தளை பாத்திரத்துடன் வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
     அதில், அவர் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்த அருந்தவம் மகன் காஸ்பர் (27) என்பதும், திருட்டு வழக்கில் கைதாகி சிறையிலிருந்து, அண்மையில் வெளியே வந்துள்ள அவர், கரியமாணிக்கம் வங்கி அருகே நிறுத்தியிருந்த பைக்கைத் திருடிக்கொண்டு, அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டில் 7 கிலோ மதிப்பிலான பித்தளை அண்டாவையும் திருடி வந்தது தெரிந்தது.
     இதனையடுத்து, காஸ்பரை கைது செய்த நெட்டப்பாக்கம் போலீஸார், அவரிடமிருந்து பைக் மற்றும் பித்தளைப் பாத்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai