Enable Javscript for better performance
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப  கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மணக்குள விநாயகர் தொழில்நுட்ப  கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் சிஎஸ்எஸ் கார்ப்பேரஷன் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     சிஎஸ்எஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் ஸ்ரீவத்சன், ஷால்சன் ஆகியோர் நிறுவனம் குறித்தும், வேலைவாய்ப்புகள், ஊதியம், எதிர்கால நோக்கம் குறித்து விவரித்தனர். கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமைத் தொடங்கி வைத்தார்.
     மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரி, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி, ஆச்சார்யா பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள், ஆல்பா பொறியியல் கல்லூரி, கிரைஸ்ட் பொறியியல் கல்லூரி, ஜான்பால் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
     முகாமின் இறுதியில் 50 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத் துறை அலுவலர் ஜெயக்குமார்
     செய்திருந்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai