Enable Javscript for better performance
மணல் கடத்தலை தடுத்த  அதிகாரியை திட்டியதாக  ஒருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தலை தடுத்த  அதிகாரியை திட்டியதாக  ஒருவர் மீது வழக்கு

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை திட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     புதுவை பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், பாகூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.
     அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற மாட்டு வண்டிகள், லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். அப்போது, சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த வண்டி உரிமையாளர் செல்வராஜ், அதிகாரிகளை கண்டித்துப் பேசியதாகத் தெரிகிறது.
     இதுகுறித்து வட்டாட்சியர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், அதிகாரிகளைத் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக செல்வராஜ் மீது பாகூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai