Enable Javscript for better performance
லாரி-பைக் மோதல்: 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் இரு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் இறந்தனர்.
     புதுவை அருகே உள்ள நோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம் (37), கார் ஓட்டுநர். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுவையிலிருந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அரியாங்குப்பம் சுண்ணாம்பாற்றுப் பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அவர், புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
     இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்துப் போலீஸார், லாரி ஓட்டுநர் கோகுலகண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     பெண் சாவு: புதுவை கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் புதன்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர். கோரிமேடு அருகே வந்தபோது, பின்னால் வந்த மினி லாரி மோதியதில் கீழே விழுந்து இருவரும் படுகாயமடைந்தனர். உடனே இவர்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா இறந்தார்.
     இதுகுறித்த புகாரின் பேரில், புதுவை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai