Enable Javscript for better performance
வில்லியனூர் கோயிலில் சூரிய பூஜை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருகாமீஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை கடந்த மூன்று நாள்கள் நடைபெற்றது.
     திருகாமீஸ்வரரை சூரியன் வழிபட்டதாகவும், சூரியன் பூஜை செய்ய தங்கிய இடம் வில்லியனூருக்கு கிழக்கே உதயம்பட்டு (தற்போது ஒதியம்பட்டு) என்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
     இதன் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பங்குனி 9, 10, 11 தேதிகளில் சூரியபூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு சித்திரை மண்டபம், ராஜகோபுரம், அர்த்தமண்டபம் மற்றும் இரண்டு வாயில்களைக் கடந்து சுயம்பு திருகாமீஸ்வரர் மீது சூரிய ஒளிபடும்.
     இதே போல் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாள்களும் சூரியபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். உத்ஸவதாரர்கள் வேலாயுதம், ராஜா, பரமானந்தகார்த்தி, கோயில் நிர்வாக அலுவலர் நா.மனோகரன், சிவாச்சாரியார்கள், ஊர்மக்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai