சுடச்சுட

  

  வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான கத்திரிக்காய் பற்றி அறியலாம்

  By காரைக்கால்  |   Published on : 02nd May 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான கத்திரிக்காய் சாகுபடி செய்து தற்போது அறுவடை நடக்கிறது. விவசாயிகள் நேரில் வந்து சாகுபடி குறித்து அறிந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த ஓராண்டு காலமாக வெளிமாநிலத்தில் உள்ள நெல் வகைகள், காய்கனி வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதன் விளைச்சல், லாப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது.

  இதன்படி தை மாதத்துக்கு பிறகு பயிரிட்ட பாலூர் -2 மற்றும் வி.ஆர்.எம்.-1, உஜாலா கோல்ட் ஆகிய ரகங்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மாதூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாய ஆர்வலர்களை அழைத்து வேளாண் நிலையத்தார் புதன்கிழமை அறுவடை குறித்து விளக்கம் அளித்தனர்.

  வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஆ. சுரேஷ் கலந்துகொண்டு பேசும்போது, விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வர வேண்டும். நெல் மற்றும் காய்களின் வகைகள் இங்கு எவ்வாறு பயிரிடப்பட்டுள்ளது. தமது விளைநிலப் பகுதியில் இப்பயிரை விளைவிக்க என்ன வகையான ஆலோசனைகள் வேண்டுமோ அதனை பெறலாம். குறிப்பாக, தோட்டப் பயிராக உள்ள கத்திரிக்காய் நல்ல லாபம் தரக்கூடியதாக உள்ளதால், இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

  நிலைய வேளாண் வல்லுநர்கள் கூறும்போது, இப்புதிய ரகங்கள் 150 நாள் பயிராகும். 65 முதல் 70 நாள்களில் பூத்து காய்க்கும் நிலைக்கு வந்துவிடும். பூச்சிகள் அதிகம் தாக்காதவை. பாலூர் -2 ரகம், அதிக காய்ப்புத் தன்மை கொண்டது. வி.ஆர்.எம் -1 ரகம், காய்களின் காம்புகளில் சிறிய முள்கள் இருக்கும். அதிக சுவை மிக்கது. உஜாலா கோல்ட் ரகம், நீண்ட வடிவிலும், கொத்துக் கொத்தாக காய்க்கும் தன்மை கொண்டது. அடர்த்தியாகவும் அதிக விளைச்சல் தரக்கூடியது. நிலையத்தில் இந்த கத்திரிக்காய்களின் விதைகளைப் பெற்று, விவசாயிகள் தங்களது நிலப்பரப்பில் பயிரிட்டு லாபம் பெற வேண்டும்

  என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai