Enable Javscript for better performance
கலைகளைப் பாதுகாக்கும் பண்பு இந்தியாவில் குறைந்து வருகிறது- Dinamani

சுடச்சுட

    

    கலைகளைப் பாதுகாக்கும் பண்பு இந்தியாவில் குறைந்து வருகிறது

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலைகளைப் போற்றி பாதுகாக்கும் பண்பு இந்தியாவில் குறைந்து வருகிறது என புகழ் பெற்ற பிரெஞ்சு நாடகக்கலைஞர் ஏரியன் நெüச்கின் கூறினார்.

     பாரிஸ் நகரில் பிரசித்தி பெற்ற சோலைல் தியேட்டர் என்ற நாடகக்குழுவை நடத்தி வரும் இவர், எகோல் நோமேட் என்ற தலைப்பில் பல்வேறு நாடுகளில் நாடகக் கலையை பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     வரும் டிசம்பர் மாதம் புதுவையில் லிசே பிரான்சிஸ் அமைப்பு சார்பில் நடத்தப்படும் பான்சோர் கலாசார விழாவில் எகோல் நோமேட் சார்பில் நாடக பயிற்சிப் பட்டறை தொடங்கப்படும். புதுவையில் இண்டியனோட்ராம், ஆதிசக்தி என்ற இரு நாடகக் குழுவினருடன் கலந்துரையாடினேன். ஆதிசக்தி குழு சிறப்பாக நாடகக் கலையை வெளிப்படுத்தி வருகிறது. சோலைல் தியேட்டர் மூலம் டுவெல்த் நைட், லேஸ் அட்ரியஸ் நாடகங்கள் பரதநாட்டியம், கதகளி, கூடியாட்டம் போன்றவை மூலம் அரங்கேற்றப்பட்டது.

     புதுவை பல்கலைக்கழகத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது.

    கலைகளைப் போற்றி பாதுகாக்கும் பண்பு இந்தியாவில் குறைந்து வருகிறது. கலை, கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான கொள்கையை இந்திய அரசியல் தலைவர்கள் பின்பற்ற வேண்டும்.

    இந்திய கலைகள் இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பொக்கிஷமாகும். நவீன நாடகக் கலையை பேணுவதில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், கலைஞர்கள் அதனைக் கைவிடக்கூடாது என்றார் நெச்கின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai