Enable Javscript for better performance
பதவி உயர்வு கிடைக்காமல் அரசு ஊழியர்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பதவி உயர்வு கிடைக்காமல் அரசு ஊழியர்கள் பாதிப்பு

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முறையான பதவி உயர்வு கிடைக்காமல் புதுவையில் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    புதுவை மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் அரசு மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல அரசுத் துறைகளில் முறையான பதவி உயர்வு இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராக இருப்போர் 25 ஆண்டுகளாக அதே நிலையில் தான் உள்ளனர்.

     மின் துறையிலும் 20 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர் முதல் பொறியாளர் வரை அதே நிலையில் தான் உள்ளனர். விவசாயம், கல்வித்துறைகளிலும் பதவி உயர்வு இல்லை. நீதிமன்றம் சென்று பதவி உயர்வு பெறும் நிலை உள்ளது. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாகவும், சுகாதாரத் துறை செவிலியர்கள் 30 ஆண்டுகளாகவும் பதவி உயர்வின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

     ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு இதுகுறித்து மத்திய அரசை அணுகி பல்வேறு துறைகளில் பதவி உயர்வுக்கான அனுமதியைப் பெறாததே இதற்கு காரணம். மேலும் அந்தந்த துறைகளில் பதவி உயர்வு கிடைப்பதற்கான கேடர் ரிவியூ மறுபரிசீலனை கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்படவில்லை.

    மாநிலத்தில் பல துறைகளில் 3,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை  வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    2016-ம் ஆண்டில் காங்கிரஸýக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைத்தால், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai