Enable Javscript for better performance
பிற்பட்டோர் நலத் துறை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பிற்பட்டோர் நலத் துறை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்பினர், முதல்வர் என்.ரங்கசாமியை சட்டப் பேரவை அலுவலகத்தில் சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனர்.

     இதுகுறித்து புதுவையைச் சேர்ந்த வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்க நிறுவனத் தலைவர் துளசிதாசன், இளைஞரணித் தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

     புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு பிற்பட்டோர் நலத்துறையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பிரிவு மக்களுக்காக அமைச்சருடன் கூடிய தனித்துறை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அடிப்படைத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.

    சென்டாக் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால், உரிய மக்களுக்கு திட்டம் சேருவதில்லை. எனவே, பிற்பட்டோர் நலத்துறையை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

     மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai