Enable Javscript for better performance
புதுச்சேரியை நவீன நகரமாக மாற்றும் திட்டம்: விரைவில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியை நவீன நகரமாக மாற்றும் திட்டம்: விரைவில் ஆய்வு

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விரைவில் ஆய்வு மேற்கொள்ளும் என அந்நாட்டு துணைத் தூதர் பிலிப் ஜானவியர் காமியாமா தெரிவித்துள்ளார்.

    அவர் புதுவையில் வியாழக்கிழமை கூறியதாவது:

     இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை (நவீன நகரம்) உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அண்மையில் அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த போது, இந்தியாவில் 3 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிக்களாக மாற்றுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் புதுச்சேரி நகர் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

     புதுவை நகரம் வரலாற்று, சுற்றுலா சிறப்பு மிக்கது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்நகரில் தடையற்ற குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவை முக்கியமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் நவீன மருத்துவமனைகள், பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட வசதிகள் நிறைந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் புதுவை மேலும் பல மடங்கு வளர்ச்சி பெறும். இத்திட்டத்துக்கு அதிக பொருள் செலவு ஆகும்.

    பிரான்ஸ் குழுவினர் வருகை:  இத்திட்டம் குறித்து முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுகுறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தலைமையில் தொழிலதிபர்கள் அடங்கிய குழு வரும் மே மாதம் புதுவைக்கு வர உள்ளது. இங்கு சுற்றுலா, தொழில்துறை முன்னேற்றம் குறித்து அக்குழு ஆய்வு செய்யும். மேலும் நகர்புற வளர்ச்சி தொடர்பாகவும் அரசிடம் ஆலோசனை நடத்தும். ஏற்கெனவே கட்டடக்கலை நிபுணர் குழு, புதுவையில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளது. இவ்விஷயத்தில் இன்டாக், மாநில அரசு நிர்வாகம், சுற்றுலாத் துறை போன்றவற்றுடன் பிரான்ஸ் அரசு இணைந்து செயல்படும்.

    புதுவையில் 5,000 பிரெஞ்சு நாட்டவர்கள் வசித்து வருகின்றனர். புதுவையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் பலமாக உதவுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் காமியாமா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai