Enable Javscript for better performance
முழு அடைப்புப் போராட்டம்: 11 பேர் சிறையில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    முழு அடைப்புப் போராட்டம்: 11 பேர் சிறையில் அடைப்பு

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம்  தொடர்பாக சமூக நல அமைப்பினர் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்கள் கடத்தச் சென்றதாக கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில போலீஸார் மற்றும் வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதனைக் கண்டித்து, புதுவையில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், அலைகள் இயக்கம், இந்தியப் பூரான்கள் இயக்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

     இதற்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இதன்படி புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆந்திர மாநில அரசைக் கண்டித்து, சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் கடைகளை மூட வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

     மறியல் போராட்டத்துக்காக ராஜா திரையரங்கம் அருகே திரண்டிருந்த,  பூரான்கள் இயக்கம் ரமேஷ், பெரியார் திராவிடர் கழகம் மோகன்தாஸ், உதயகுமார், ஆசைத்தம்பி, மூர்த்தி, ரகு, தமிழ் தமிழர் இயக்கம் மகேஷ், வையவன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் விஜயகுமார், இளையரசன், இளங்கோ ஆகிய 11 பேரை, பெரியகடை போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர். இவர்களை, புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள்கள் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai