Enable Javscript for better performance
வங்கிப் பணத்தில் கள்ள நோட்டுகள்: சிபிசிஐடி போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    வங்கிப் பணத்தில் கள்ள நோட்டுகள்: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2015 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     புதுவை வங்கிகளிலிருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த வகையில், புதுவையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய தொகையில், இரண்டு 1,000 ரூபாய் நோட்டுகள், மூன்று 500 ரூபாய் நோட்டுகள், மூன்று 100 ரூபாய் நோட்டுக்கள் என 8 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது தெரிய வந்ததாம். இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் வெங்கடராஜி, புதுவை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

     இதே போல், புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய தொகையில், 500 ரூபாய் நோட்டுகள் மூன்றும், 100 ரூபாய் நோட்டுகள் 8ம் கள்ள நோட்டுகளாக இருந்தது தெரிய வந்ததாம். இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலாளர் தேவிஸ்ரீ, புதுவை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்கள் குறித்து, புதுவை சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai